துறையூர் அருகே போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி அருகே ராக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் பிரசாந்த். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் தாதம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாகராஜ்-சித்ரா தம்பதியரின் 16 வயது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக நாகராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பிரசாத்தையும் நாகராஜன் மகளையும் கடந்த 3 ஆண்டுகளாக தேடி வந்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நாகராஜன் மகள் தற்போது மீண்டும் கருத்தரித்து நிலையில் பிரசாந்த் பிப்ரவரி 4-ஆம் தேதி நாகராஜனை தொடர்பு கொண்டு தன் மனைவியின் ஆதார் அட்டையை கேட்டுள்ளார்.
நாகராஜ் தன் மகளை பிரசாந்த் கடத்தி சென்றதாக போலீசில் புகார் அளித்தார். பின்னர் காவல்துறையினர் திருப்பூருக்கு சென்று அங்கிருந்த பிரசாந்தை கைது செய்தனர். மேலும் பிரசாத்தின் மனைவி மற்றும் குழந்தையை பேருந்தில் வர சொல்லி உள்ளனர். இந் நிலையில் அவரிடம் முசிறி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை நடத்தியுள்ளார். காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சிய பிரசாந்த் காவல் நிலையத்தில் இருந்து குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள மனைவியையும் அழைத்துள்ளார்.
அவருடைய மனைவி பிரசாந்தின் காலை பிடித்துக்கொண்டு தற்கொலை எண்ணத்தை கை விடுமாறு கேட்டு உள்ளார். பின்னர் அவரை உதறி தள்ளிவிட்டு ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தின் முதல் தளத்தில் இருந்து ஏறி குதித்து உள்ளார். இதனால் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அவரை மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில் பிரசாந்தின் உயிரிழப்பை கண்டித்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் காவல் துறையினரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.