இரணியில் வாடகை வீட்டில் விபச்சாம் நடத்திய வாலிபர்களை கைது செய்த காவல் துறையினர்.
கன்னியாகுமரி பகுதியில் இரணியல் உள்ள காவல் துறையினருக்கு, காரங்காடு பகுதியில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு குறிப்பிட்ட வீட்டை சோதனை செய்தனர்.
அப்பொழுது திக்குறிச்சி பகுதியை சேர்ந்த வீஜு வயது 34, இவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அங்கு 2 பெண்களுடன் உல்லாசமாக இருக்க வந்த இரண்டு வாலிபர்கள் மேலும் விஜு அகிய 5 பேரில் 3 பேரை காவல் துறையினர் கைது செய்து, 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.