நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் சொந்தமாக காடு உள்ளது. அங்கு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டரான பெருமாள் சாமி முன்னிலையில் ரோந்து பணி நடைபெற்றுள்ளது. அப்போது அந்தக் காட்டிலுள்ள பம்புசெட் அறையில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குருசாமியிடமிருந்த நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தோடு, அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.