திடீரென மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பட்டாசு கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் பட்டாசு கடைகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் திடீரென சோதனையை மேற்கொண்டனர். இதனை அடுத்து பேரியம் வேதியல் பொருட்கள் வைத்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.
இதனால் அதிகாரிகள் பட்டாசு கடைகளில் இதுபோன்ற உற்பத்தி நடைபெறுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அரசின் விதிமுறைகளை மீறி பேரியம் பட்டாசுகளை விற்பனை செய்த கடைகளுக்கு உரிமம் ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த சோதனையின் போது மாவட்ட ஆட்சியருடன், வருவாய் அதிகாரிகள், தாசில்தார் மற்றும் அரசு அலுவலர்கள் என பலரும் உடனிருந்துள்ளனர்.