Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பழனி முருகன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழனி முருகன் கோவிலில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வம் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |