Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திறந்து கிடந்த ஷட்டர்…. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஜவுளிக்கடையில் 2 1/2 லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்ற ஜெயக்குமார் ஷட்டர் திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த 2 1/2 லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜெயக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜவுளி கடையில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |