350 கிலோ ரப்பர் சீட்டுகளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறம் ரப்பர் சீட்டு உலர்த்தும் உலர் கூடம் அமைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் உலர் கூடத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் 350 கிலோ ரப்பர் சீட்டுகளை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து செல்வராஜ் குலசேகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உலர் கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபர் ரப்பர் சீட்டுகளை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.