Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அவங்கதான் இப்படி பண்ணிருக்காங்க…. சடலமாக தொங்கிய இளம்பெண்…. உறவினர்களின் பரபரப்பு புகார்…!!

இளம்பெண்ணின் இறப்பு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மரேகவுடா என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிரண் என்பவருடன் பாரதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறிவிட்டது. இதனை அறிந்த மரேகவுடா தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திடீரென பாரதி தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாரதியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து மரேகவுடாவும், அவரது தந்தையான முனியப்பாவும் இணைந்து பாரதியை அடித்துக்கொலை செய்திருப்பதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாரதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கணவரும், மாமனாரும் இணைந்து தாக்கியதால் அவர் இறந்தாரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |