Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகாசி பஜார் பகுதியில் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த இருவரையும் அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன் பிறகு அந்த வாலிபர்கள் சரவணன், காண்டீபன் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் சட்ட விரோதமாக வெளி மாநில லாட்டரி என்று சில எண்களை எழுதி கொடுத்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வாலிபர்களிடம் இருந்து 23,440 ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வேல்சாமியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |