Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுகாதாரம் ரொம்ப முக்கியம்… காவல்துறையினரின் தீவிர முயற்சி… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு அதிகாரிகள் கொரோனா தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் கொரோனா  கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

இதனை அடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் இருந்த பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினர் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

Categories

Tech |