Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் சென்ற போலீஸ்காரர்… திடீரென நடந்த துயர சம்பவம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் போலீஸ்காரரும், அவரது மகளும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில் குப்பம் பகுதியில் பாஸ்கர் என்ற போலீஸ்காரர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊத்துக்கோட்டை பகுதியில் போக்குவரத்து பிரிவு போலீசில் பணிபுரிந்து வந்த பாஸ்கர் கடந்த ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மனிஷா, ப்ரீத்தி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் பாஸ்கர் தனது இரண்டாவது மகளை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மஞ்சூர் பகுதியில் இருக்கும் தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களது மோட்டார் சைக்கிள் வண்டலூர் மஞ்சூர் 400 அடி சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதியதால் தந்தை மகள் இருவரும் கீழே விழுந்துவிட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் ப்ரீத்தியை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |