Categories
உலக செய்திகள்

“சீனாவுக்கு ஆதரவு” உளவு பார்த்த காவல்துறை அதிகாரி…. அதிரடி கைது…!!

சீனாவுக்கு உளவு பார்த்து நாட்டு மக்களின் தகவலை பகிர்ந்த காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காவல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர் பய்மதாஜீ. இவரது பூர்வீகம் திபெத் ஆகும். அமெரிக்காவின் குடியுரிமையை பெற்ற பய்மதாஜீ மீது அமெரிக்காவில் இருக்கும் திபெத் சுதந்திர இயக்கத்தின் ஆதரவாளர்களை சீன அரசுக்கு உதவி புரியும் விதமாக உளவு பார்த்து வந்ததா குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து பய்மதாஜீ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதில் அவர் திபெத் மக்களின் நடவடிக்கைகளை சீனா அதிகாரிகளுக்கு தெரிவித்தது அம்பலமானது. நியூயார்க் நகரில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்த அவருக்கும் சீன துணை தூதரகத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் இருவருக்கும் கடந்த 2018ம் வருடம் முதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு வழக்கறிஞர் கூறுகையில், “சீன நாட்டிலிருந்து கலாச்சார நுழைவு விசா மூலம் அமெரிக்காவிற்கு வந்து சேர்ந்தவர் பய்மதாஜீ.

தனது விசா காலம் முடிவடைந்த பிறகும் அமெரிக்காவிலேயே தங்கி இருக்கும் அவர் தான் திபெத்தியர் என்றும் அதனால் சீன அதிகாரிகள் கைது செய்து துன்புறுத்தியதாகவும், எனவே தனக்கு அமெரிக்காவிலேயே இடமளிக்க வேண்டும் என்று கூறியும் விண்ணப்பித்திருந்தார். அதன் பிறகு தான் அமெரிக்க குடியுரிமை அவருக்கு வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |