பட்டாசு வீசியதை தட்டிக்கேட்ட போலீசார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இறந்தவரின் சடலம் அப்பகுதியில் இருக்கும் மார்க்கெட் வழியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பூக்கள் தூவியும், பட்டாசு வெடித்தும் சென்றுள்ளனர். இந்நிலையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் முகமது அபு என்பவர் அவ்வழியாக தனது சகோதரர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் முகமது அபூ மீது பட்டாசு வீசியதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட முகம்மதை அவர்கள் தாக்கியுள்ளனர். இது குறித்து முகமது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்தபோது அவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் செந்தில் கார்த்திக் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.