Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு…. போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் இருந்த போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தங்கபுஷ்பம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமரேசனை நெடுஞ்சாலை ரோந்து பிரிவிற்கு இட மாற்றம் செய்துள்ளனர். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து உள்ளார்.

இந்நிலையில் குமரேசன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |