Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படியில் நின்ற போலீஸ்காரர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்து போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு மோகன் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் எழும்பூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேத்துப்பட்டு எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது படியில் நின்று கொண்டிருந்த மோகன் திடீரென கால் தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |