Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கடத்தல் வழக்கில் சம்மந்தமா….? போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

கடத்தல் வழக்கில் கைதான போலீஸ்காரரை கமிஷனர் தீபக் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் கார் டிரைவரான மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த வாரம் சிலர் மகேஸ்வரனை காரில் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக தங்க கடத்தலில் ஈடுபடும் கும்பல் மகேஸ்வரனை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

அதன்பின் காவல்துறையினர் மகேஸ்வரனை மீட்டதோடு கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். இதில் கோவை நகர குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனரின் கார் டிரைவராக பணிபுரியும் ராஜேஸ்வரன் என்ற போலீஸ்காரர்களும் ஒருவராவார். இந்நிலையில் கோவை நகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.தாமோதர் ராஜேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |