கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த கோவில் நிர்வாகியை காவல் துறை ஆய்வாளர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருத்தணி சட்ட ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தனது நண்பர் ஒருவருடன் திருத்தணி சுப்பிரமணிசுவாமி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவில் ஊழியர் சரவணன் கொரோனா முன்னெச்சரிக்கையாக யாருக்கும் அனுமதி இல்லை எனக்கூற காவல் ஆய்வாளர் ஆன என்னையே தடுத்து நிறுத்துகிறாயா எனக்கூறி முருகன் அவரை அறைந்துள்ளார்.