Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அறைக்கு சென்ற காவல் அதிகாரி… பார்த்ததும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… சென்னையில் நடந்த சோகம்…!!

காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் கமலக்கண்ணன் என்ற காவல் அதிகாரி வசித்து வந்துள்ளார். இவர் சென்னை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் காவல் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கமலக்கண்ணன் கடந்த மார்ச் மாதம் முதல் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதனையடுத்து நேற்று தனது அறைக்குச் சென்ற கமலக்கண்ணன் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கமலக்கண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஐஸ்அவுஸ் காவல் துறையினர் கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணிச்சுமை காரணமாக கமலக்கண்ணன் தற்கொலை செய்துள்ளாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |