Categories
உலக செய்திகள்

தாயுடன் பயங்கரமாக சண்டையிட்ட மகன்…. தடுக்கச் சென்ற அதிகாரிகள் பலி… அமெரிக்காவில் கொடூரம்…!!!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பணியில் இருந்தபோது வீரமரணமடைந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு பெண், காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு, என் மகன் என்னுடன் கடுமையாக சண்டையிடுகிறார் என்று புகார் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, உடனடியாக அவர்களின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மீது, அவரின் மகன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில், 2 அதிகாரிகள் படுகாயமடைந்தனர். எனினும், அதில் ஒரு அதிகாரி, அந்த நபரை துப்பாக்கியால் சுட்டார். ஆனால், படுகாயமடைந்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக பலியாகினர். தற்போது வீர மரணமடைந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Categories

Tech |