Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்களுடன் “செல்பி” எடுக்க வேண்டும்….. டோனிக்கு தொல்லை கொடுத்த உயரதிகாரிகள்….!!

செல்பி எடுக்க வேண்டும் என்று போலீஸ் உயரதிகாரிகள் மகனுடன் வந்து டோனிக்கு தொல்லை கொடுத்துள்ளனர். 

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல்  ஐ.பி.எல். போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூரு அணியை வென்றது.  இந்த போட்டி நடைபெறுவதற்கு முன்பு அதில்  கலந்து கொள்வதற்காக CSK  அணியின் கேப்டன் டோனி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதியில்  சில தினங்கள் தங்கி இருந்தார்.

Related image

இந்தநிலையில் டோனி தங்கியிருந்த ஹோட்டலுக்கு  புகைப்படம் எடுப்பதற்காக  உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் அவர்களது பிள்ளைகளுடன் அங்கு வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்களுடன் வந்தவர்களில் ஒரு முக்கிய அரசியல் புள்ளி ஒருவர் தனது பேரனை அங்கு அழைத்து வந்துள்ளார். அவர் டோனியுடன் ‘செல்பி’ எடுத்தே ஆக வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றுள்ளார்.  ஒரு கட்டத்தில் டோனிக்கு அதிக அளவில் தொல்லை தர  எரிச்சல் அடைந்த அவர்   அணி மேலாளர் ரசூலிடம் கூறினார்.  அவர் அங்கு காவலுக்கு இருந்த உயர் பெண் போலீஸ் அதிகாரியிடம் புகார் அளித்தார்.  ‘செல்பி’ என்ற பெயரில் அவருக்கு தொந்தரவு செய்பவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |