Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… குவாரி அருகே வைத்து… சூதாடிய 5 பேர் கைது…!!

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிக்குடி பகுதியில் உள்ள குவாரி அருகே வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சட்டவிரோதமாக காசு வைத்து சூதாடியது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கருப்பசாமி(42),  முத்துக்குமார்(36), பொன்ராஜ்(37), குமரவேல்(49), விஜயகுமார்(31) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |