ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கீழக்கரை காஞ்சிரங்குடி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் 4 பேர் சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சாகுல் ஹமீது, முகைதீன் சார், முகம்மது உசேன், உசேன் அப்துல் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் சூதாட்டத்திற்காக வைத்திருந்த 14,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.