Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இவங்க தொல்லை தாங்கல… போலீசாருக்கு கிடைத்த புகார்… 2 பேர் கைது…!!

ராமநாதபுரத்தில் வெளியேறியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இலந்தைகுளம் சாலையில் 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சாயல்குடி அடுத்த நல்லான்பட்டியை சேர்ந்த வினித்(21) மற்றும் அவர்களது நண்பர்கள் தான் வழிப்பறியில் ஈடுபட்டது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வினித் மற்றும் அவரது நண்பரை கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவான மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |