Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூப்பராக செயல்பட்ட போலீஸ்காரர்…. காப்பாற்றப்பட்ட பெண்மணி…. துணிச்சலுக்கு கிடைத்த பாராட்டுக்கள்…!!

துணிச்சலாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர் ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை பனகல் மாளிகை வழியாக சைதாப்பேட்டை சட்டம்-ஒழுங்கை இன்ஸ்பெக்டர் புகழேந்தி காரில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் சைதாப்பேட்டை அடையாறு ஆற்று பாலத்தின் கீழ் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் புகழேந்தி அங்குள்ள மரக்கட்டைகளை போட்டு நடந்து சென்று அப்பெண்ணை காப்பாற்றியுள்ளார்.

அதன்பிறகு அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் கிண்டி நாகிரெட்டி தோட்டம் பகுதியில் வசித்து வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரின் மகன் ஆனந்தன் என்பவரிடம் காவல்துறையினர் அந்த பெண்ணை ஒப்படைத்துள்ளனர். இது பற்றி அறிந்த சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், துணை கமிஷனர் விக்ரமன் போன்றோர் துணிச்சலாக செயல்பட்டு பெண்ணின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் புகழேந்தியை பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |