Categories
உலக செய்திகள்

காணாமல் போன இரண்டு சிறுமிகள்.. காவல்துறையினர் தேடுதல் வேட்டை..!!

பிரிட்டனில் கடந்த சனிக்கிழமை அன்று மாயமான இரண்டு சிறுமிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பிரிட்டனில் வசிக்கும் சிறுமிகள் Ruby Cuskern(14) மற்றும் Megan Hardwick(15) ஆகிய இருவரும் மாயமானதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பொது மக்களிடம் சிறுமிகள் குறித்து தெரியப்படுத்த அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கின்றனர்.

மேலும் சிறுமிகள் கடந்த சனிக்கிழமை அன்று ஸ்டாக்டனின் ஈஸ்ட்போர்ன் என்ற பகுதியில் இருக்கும் வயல் ஒன்றில் இறுதியாக காணப்பட்டுள்ளனர். எனினும் அதன் பின்பு அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காவல்துறையினரிடம் அந்த பகுதி மக்கள் சிறுமிகள் குறித்த தகவல்களை தெரிவித்துள்ளனர். எனினும் இந்த தகவல்களை வைத்து அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் சிறுமிகள் பாதுகாப்புடன் இருப்பார்கள் என்று நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |