கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அதற்கு காரணமாக இருந்த நபரை பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிலோன் காலனியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பாக்கியலட்சுமி புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இத்தகவலை அறிந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் மாணவியின் உடலானது அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து மாணவியின் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்த போது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் அவரது செல்போனில் பிரியா என்ற பெயரில் உள்ள ஒருவன் தான் என குறிப்பிட்டுள்ளார்.
இதைதொடர்ந்து போலீசார் மாணவியின் கைப்பேசியை ஆய்வு செய்த போது மாணவி பாக்கியலட்சுமி ஒரு நபரை காதலித்து வந்ததும், அதன்பிறகு மாணவி அந்த வாலிபரை ஒதுக்கியதால் கோபமடைந்த அந்த வாலிபர் அவரும் பாக்கியலட்சுமியும் நெருக்கமாக இருந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் தான் பாக்கியலட்சுமி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தற்கொலையில் சம்பந்தப்பட்ட அந்த வாலிபர் யார் என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்