மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தல் காரர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கும்மங்குடி பகுதியானது, கே.புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. எனவே கும்மங்குடி பகுதியில் கே.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரை காவல் துறையினர் வழி மறித்தனர்.
இதனை பார்த்த ஓட்டுனர் பாதியிலேயே டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் டிராக்டரை சென்று சோதனையிட்டனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து டிராக்டரை கைப்பற்றிய காவல் துறையினர் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.