கல்லால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூரிலிருந்து திருக்கோவிலூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திருக்கோவில் ராசிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர் திடீரென ஒரு கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடி நோக்கி வீசிவிட்டார். இதனால் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து விட்டது.
இதனைப் பார்த்ததும் பேருந்தில் பயணித்த பயணிகள் சத்தம் போட, ஓட்டுனர் பேருந்தை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டார். அதன் பின்னர் திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ் கண்ணாடியை உடைத்த அந்த மர்ம நபரைத் தேடினர். ஆனால் அந்த நபர் அதற்குள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பேருந்தின் கண்ணாடியை உடைத்த அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.