Categories
மாவட்ட செய்திகள்

”பெண்ணிடம் 10 பவுன் தங்கநகைப் பறிப்பு” போலீஸ் விசாரணை.!!

நாகர்கோவிலில் பெண்ணிடம்  10 பவுன் தங்க நகையை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

நாகர்கோவிலில் தேவாலயத்திற்கு நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  கொள்ளை சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Related image

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவமானது அருகே இருந்த மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. சிசிடிவி கேமரா பதிவினை ஆய்வு செய்து குற்றவாளியை போலீஸார் வலை வீசித்  தேடி வருகின்றனர்.

Categories

Tech |