Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்.!!

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பெயரில் கோவில்பட்டி நகரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவில்பட்டி தெற்கு பஜார், மார்கெட் ரோடு, கிருஷ்ணன் கோவில் ரோடு, பூ மார்கெட், மெயின் ரோடு ஆகியப் பகுதிகளில் இருக்கும் வணிக நிறுவனங்களில் சுகாதார ஆய்வாளர்கள் குழு செய்த இந்த ஆய்வில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் ஒரு டன் பறிமுதல் செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த மற்றும் பதுக்கி வைத்திருந்த வணிக நிறுவனங்கள், 2 குடோன்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மூன்று முறைத் தொடர்ந்து இதுபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று நகராட்சி அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |