Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அடேய்…! பாவிகளா இப்படியா கடத்துவீங்க… போலீஸ் அதிரடி… பரபரப்பான விழுப்புரம் …!!

புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அலமேலு புறத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணனின் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் ஆகியோரின் மேற்பார்வையில், தனிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தம் தலைமையில், விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜலெட்சுமி, சுரேஷ்குமார் மற்றும் பிற போலீசார் இணைந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அலமேலுபுரம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது போலீசார் சந்தேகத்தின் பேரில் அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்ததில் அதில் புகையிலைப் பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நடத்திய தீவிர விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பதும், தனது வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் திருவண்ணாமலை அண்ணா நகரில் வசித்துவரும் சுபாஷ் சந்திரபோஸ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து திருவண்ணாமலை வரை சென்ற தனிப்படை போலீசார் சுபாஷை மடக்கிப்பிடித்தனர். அதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கார் மற்றும் சரக்கு வாகனம் மூலம் பெங்களூரிலிருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து புதுச்சேரி மாநிலம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதோடு  அவர்களிடமிருந்து ரூ 8 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ7  லட்சம் மதிப்பிலான கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஓசூரை சேர்ந்த மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பார்வையிட்ட  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன்  போலீசாரை பாராட்டி உள்ளார்.

Categories

Tech |