விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மொத்தம் 320 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 16 சோதனை சாவடிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முக கவசம் காவல்துறையினர் அணியாமல் சென்ற 60 பேருக்கும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 20 பேருக்கும் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிந்த குற்றத்திற்காக 139 பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, அவர்களிடமிருந்து 69 ஆயிரத்து 500 ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். மேலும் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 22 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 49 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 71 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீலகிரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மொத்தம் 320 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.