தேனி மாவட்டத்தில் அண்ணன், தம்பி இருவரையும் மணல் கடத்தலில் தொடர்புடைய சிலர் தாக்கியதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள தேவாரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் நிலஅளவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய சகோதரர் ரவி மதுரையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இதனையடுத்து இவர்களை மணல் கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் தாக்கியதாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் கடந்த 7ஆம் தேதி செல்வராஜ் வழக்கம் போல வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது திமுக நிர்வாகி ஒருவர் வழிமறித்து சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக அவர் மீது நான் புகார் கொடுத்ததாக என்னை மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி மணல் கடத்தும் கும்பலை சேர்ந்த சிலர் தேவாரத்தில் வைத்து அண்ணன் ரவியை தாக்கி அவரது செல்போனை பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் ரவியும், செல்வராஜும் கலெக்டரிடம் மனு அளித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடமும் புகார் அளித்துள்ளனர்.