Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கேக் வெட்ட வராத காதலன்… மனவேதனையில் பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு.!

பிறந்தநாள் கேக் வெட்ட காதலன் வராத சோகத்தில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இருப்புப்பாதை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சரண்யா. இவர் நேற்று காலை கொரோனா தடுப்புப் பணி முடித்து மாலையில் அயனாவரத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்து சரண்யாவின் தோழி ராஜேஸ்வரி என்பவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சரண்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் காவலர் சரண்யாவின் காதலரான ஏழுமலை என்பவருக்கு பிறந்தநாள் என்பதும் அதனை கொண்டாட சரண்யா கேக் வாங்கி கொண்டு சென்றதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் ஏழுமலை கேக் வெட்ட செல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |