கொலை வழக்கில் கைதான போலீஸ் ஏட்டை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகர் பகுதியில் லூர்து ஜெயசீலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 9ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்த பொன் மாரியப்பனை கைது செய்தனர்.
அதன் பின் மற்றொரு குற்றவாளி தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் ரவுடி மோகன்ராஜ் போன்றோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஏட்டு பொன் மாரியப்பனை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.