Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருத்தர் கூட தப்பிக்க முடியாது… தீவிர கண்காணிப்பு பணி… போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

போலீஸ் சூப்பிரண்டு ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனின் உத்தரவின் படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேவை இல்லாமல் வெளியே சுற்றும் நபர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் துவங்கி வைத்துள்ளார்.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறும்போது, ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் இளைஞர்கள் கூட்டமாக விளையாடக்கூடாது என்று எச்சரித்துள்ளார். மேலும் முழு ஊரடங்கை  மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றிய 40 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முக கவசம் அணியாமல் இருந்ததற்காக மொத்தம் 2000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு ஊரடங்கின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.

Categories

Tech |