Categories
உலக செய்திகள்

“தன் குழந்தைகளையே நடுரோட்டில் விற்க முயன்ற காவலதிகாரி!”.. காரணம் என்ன..? வெளியான வீடியோ..!!

பாகிஸ்தானில் சிறைக்காவல் அதிகாரி, அவரின் சொந்தப் பிள்ளைகளை 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் சிந்து மாகாணத்தை சேர்ந்த நிசார் லஷாரி, என்பவர் சிறைக் காவலராக இருக்கிறார். இந்நிலையில், அவரது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தன் மகனுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, மேலதிகாரிகளிடம் விடுப்பு கேட்டிருக்கிறார்.

அப்போது மேலதிகாரி, நிசாரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார். நிசார்யிடம், பணம் இல்லாததால், அவரால் கொடுக்க முடியாமல் போனது. எனவே, சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் லார்கானா நகருக்கு நிசாரியை மாற்றிவிட்டனர். அவர் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருப்பதாவது, லஞ்சம் கொடுக்கவில்லை என்பதற்காக, எனக்கு எதற்கு தண்டனை தந்தார்கள்?

நான் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறேன். நான் இப்போது அவர்களுக்கு லஞ்சத்தை கொடுப்பதா? அல்லது என் பிள்ளையின் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுப்பதா? என்று கேட்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் அவர் தன் இரண்டாவது மகனை தோளில் சுமந்து கொண்டு, முதல் மகனை கையில் பிடித்துக் கொண்டு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய, நடுரோட்டில் நின்ற வீடியோ இணையதளங்களில் வைரலானது. தற்போது அந்த வீடியோ, சிந்து மாகாணத்தின் முதல்வரான முராத் அலி ஷா, கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. எனவே அவருக்கு இரண்டு வாரங்கள் விடுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |