முகக்கவசம் அணியாமல் வந்த 30 நபர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் வந்த 30 நபர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் காவல்துறையினர் ரூ.200 அபராதம் வசூலித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் அவர்களிடம் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.