Categories
அரசியல் மாநில செய்திகள்

காவல்துறை பலவீனம்…. சட்ட-ஒழுங்கு தோல்வி…. துணை முதல்வர் விமர்சனம்…!!

ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட் எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிப் பேசி இருந்தாலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான் என்று கூறியுள்ளார். இது ஆழ்வார் உள்ளிட்ட பல இடங்களில் சட்டம் ஒழுங்கு கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில்தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Image result for சச்சின் பைலட்

இந்த விஷயத்தில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் சச்சின் பைலட் குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் காவல்துறை பலவீனமாக இருப்பதாலும் சட்டம்-ஒழுங்கு தோல்வியடைந்துள்ளதால் கலவரம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கருத்து உள்துறையின் உள்துறை அமைச்சக பொறுப்பை வைத்திருக்கும் முதலமைச்சர் கெஜலாட்டை குற்றம்சாட்டும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரும் விடுவிக்கப்பட்டதாக நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |