காவல்துறை அதிகாரிகள் மோப்ப நாய்க்கு சிலை வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகரில் போலீஸ் டாப் ஸ்பாட்டில் உறுப்பினராக பணியாற்றி வந்த ஏ.எஸ்.பி டிங்கி என்னும் ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த நாய் ஒன்று இருந்துள்ளது. இந்த நாய் இதுவரை 40க்கும் மேற்பட்ட சிக்கலான கிரிமினல் வழக்குகள் தீர்ப்பதற்கு உதவி செய்துள்ளது. ஆனால் கடந்த வருடம் நவம்பர் மாதம் எதிர்பாராத விதமாக இந்த நாய் பலியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் அனைவருக்குமே தங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டதாக கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் எவ்வளவு சிக்கலான வழக்குகளையும் இந்த நாய் தீர்த்து வைக்கும் என்று நினைத்த காவல்துறையினர் இதற்கு ஒரு சிலையை அமைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி இந்த நாயை கௌரவிக்கும் விதமாக முசாபர்நகர் காவல்துறையினர் இந்த நாய்க்கு சிலை வைத்துள்ளனர். மேலும் இந்த சிலையை காவல் துறை உயரதிகாரிகள் திறந்து வைத்துள்ளனர். நாய்க்கு காவல்துறை அதிகாரிகள் சிலை வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.