ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணை போலீஸ்காரர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அடைக்கலாபுரம் பகுதியில் ஜாக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி ஆயுதப் படையில் காவலராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறேன் என ஜாக்சன் 22 வயது பட்டதாரி இளம்பெண்ணுடன் பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜான்சன் அந்த பெண்ணை காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து ஜாக்சன் அந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.