வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினரிடம் தொழிலாளி சண்டை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டியப்பனூர் கூட்ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக நிற்காமல் சென்ற நபரை நிறுத்திய போது அவர் தனது ஆவணங்களை சப்-இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டு தனது மொபைல் போனில் அவரை படம் பிடித்துள்ளார். இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் என்னை எதற்காக மொபைல் போனில் படம் பிடிக்கிறார் என கேட்ட போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து செல்போனே பிடுங்குவதற்கு முயற்சி செய்த போது சப்-இன்ஸ்பெக்டரும் அவரும் ஒருவரை ஒருவர் கீழே தள்ளி கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் சாலையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். அதற்கு பிறகு சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து தப்பியோட முயன்ற அவரை அருகில் இருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து ஒரு கம்பத்தில் கயிறால் கட்டிப் போட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் தொழிலாளியான முரளிதரன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.