பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4ஆம் கட்ட அறிவிப்புகளை டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.
கடந்த 3 நாட்களாக விவசாயிகள், மீனவர்கள், புலம்பெயர் தொழிலாளர், சிறுதொழில் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று புதிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இது தொடர்பாக, செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ” இந்தியாவை தற்சார்பு பொருளாதாரமாக்குவது தான் முக்கியம்.
அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மை கொண்டுவரவேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் பல்வேறு துறைகளுக்கான கொள்கைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பயனாளிகளுக்கு நேரடியாக மானியத்தை வங்கிக்கணக்கில் செலுத்துவது மிக முக்கியமான சீர்திருத்தம் என தெரிவித்துள்ளார். மேலும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது இந்திய பொருளாதாரத்தின் பாதையை மாற்றிய சீர்திருத்த நடவடிக்கை என கூறியுள்ளார்.
தொழிற்துறை அமைப்பு மூலம் 5 லட்சம் ஹெக்டேரில் 3,376 தொழிற்பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு தொழிற்பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும். முதலீடுகளை எளிதாக ஈர்க்கும் வகையில் கொள்கை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதலீடுகளுக்கான அனுமதியை அதிவிரைவாக வழங்க அரசு செயலாளர்கள் மட்டத்திலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைக்க்ககத்திலும் திட்ட மேம்பாட்டு பிரிவு உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.முதலீடுகளை ஈரப்பதன் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்படும்” என கூறியுள்ளார்.