போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் 43, 5100 மையங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .
வழிகாட்டு நெறிமுறைகள்:
தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய முக்கிய இடங்களில் என மொத்தம் 43,5100 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். இந்த மையங்களில் 7.70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதுகுட்டப்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
போலியோ சொட்டு மருந்து முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெறுவதற்காக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை கட்டாயமாகும்.
பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் போலியோ மருந்து மையங்களுக்குல் அனுமதிக்க கூடாது. மேலும் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுடன் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். தேசிய தடுப்பு அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கப்படுவது அவசியம்.
அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியம். குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் அபோது வர்களது கை இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும். புலம்பெயர் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும்.
பயணிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களின் வசதிக்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சோதனைச்சாவடி, விமான நிலையங்களில் கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை பின்பற்றி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடமாடும் குழுக்கள் மூலமாக தொலை தூரம் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுவார்கள்.
எனவே பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.