Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீஸ் வீட்டிலேயே இப்படி பண்ணிட்டாங்களா…. இரவில் மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பீதியில் மக்கள் …!!!

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

திருவண்ணாமலை மாவட்டம்  கிழக்கு காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுந்தர் மத்தள தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர் . இதில்அவரது வீட்டின்  சுவர்  தீப்பற்றி கரும்புகை படர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் அவர் அதிகாலை தூங்கி எழுந்த போது வீட்டில் கரும்புகை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு தான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியிருப்பது அவருக்கு தெரிந்தது .

இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த சம்பவத்தை புரிந்து கொண்ட அவர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் முன்விரோதம் காரணமாக யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்களா  என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றன. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |