Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீசாரை கண்டதும் தப்பியோட்டம் …. மடக்கி பிடித்த போலீசார் …. 2 பேர் கைது …!!!

திருவள்ளூரில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன .

திருவள்ளூர்  மாவட்டம் அதிகத்தூர் கொசஸ்தலை ஆற்றின் அருகே  மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று முன்தினம் கடம்பத்தூர் சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் திருட்டுத்தனமாக மணலை கடத்தி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர் .

அப்போது  போலீசாரை கண்டதும் அந்த 3 பேரில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். இதில் 2 பேரை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பிடிபட்ட 2  பேரும் குப்பம் கண்டிகை பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பதும்,  ராமர் கோவில் பகுதியை சேர்ந்த கோகுல் என்பதும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |