Categories
தற்கொலை தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போலீசாரின் வற்புறுத்தல்… மனம் நொந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு…!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராக போலீசார் வற்புறுத்தியதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே கந்தபுரத்தை சேர்ந்தவர் மணிவாசகன். இவருக்கு சவுந்திரராஜன்(31)என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஒரு மளிகை கடையில் வேலை செய்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த பிரசாந்தி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பிரசாந்தியின் தந்தை கண்டித்துள்ளார். அதனால் சவுந்திரராஜன் வேலையை விட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இருப்பினும் இருவரும் தங்களது காதலை செல்போன் மூலம் பேசி வளர்த்து வந்தனர்.கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் உடன்குடி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரசாந்தி மதுரைக்குச் சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த கணவர் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன்பின் போலீசார் பிரசாந்தியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஆனால் பிரசாந்தி அந்த பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் தன் கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் சவுந்திரராஜனை மகளிர் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். ஆனால் சௌந்திரராஜன், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கூறி, நான் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஆஜராவதாக வக்கீல் மூலம் மகளிர் காவல் நிலையத்திற்கு மனு அனுப்பினார். ஆனால் மகளிர் போலீசார் அவரை விசாரணைக்காக நேரில் வருமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதனால் சௌந்திரராஜன் மனம் விரக்தியடைந்து நேற்று முன்தினம் தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.மேலும் இது குறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சௌந்திரராஜனின் உடலை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |