Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல் ….. கஞ்சா விற்ற 2 பெண்கள் …. கைது செய்த போலீசார் ….!!

கஞ்சா பொட்டலங்களை  மறைத்து வைத்து  விற்ற  2 பெண்கள் உட்பட  3 பேரை போலீசார் கைது செய்தனர் .

திருவண்ணாமலை மாவட்டம் சமுத்திரம் காலனியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி தலைமையிலான  போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்து வந்த கலைவாணி,  நீலாம்பரி என்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் தேனிமலையில் நடத்திய சோதனையின் போது அதே பகுதியை சேர்ந்த திவாகர் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 80 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |