Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரசியல் பழி விளையாட்டு…. ஜாமியா மாணவர்களுக்கு குரல்கொடுக்கும் பதான்..!!

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், டெல்லியில் நடைபெற்றுவரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக நாடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் அச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியிலுள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்ற டெல்லி காவல் துறையினர், மாணவர்களிடையே போராட்டத்தை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஏராளமான மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.

மேலும் இத்தாக்குதல் காரணமாக மாணவர் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டதினால், தலைநகர் முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்ஃபான் பதான் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசியல் பழி விளையாட்டு என்றென்றும் தொடரும், ஆனால் நானும் எங்கள் நாடும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களைப் பற்றி கவலைப்படுகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |