Categories
உலக செய்திகள்

அரசியல் நெருக்கடியில் பிரபல நாடு…. ஆலோசனையில் பாதுகாப்பு கவுன்சில்…. தலைமை ஏற்ற ஐ.நாவின் சிறப்பு தூதர்….!!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சோமாலியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா நாட்டில் சோமாலியா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தில் அரசியல் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் அங்கு தேர்தல்கள் தாமதமாகிறது.

மேலும், கிழக்கு ஆப்பிரிக்காவில் அரசியலின் ஸ்திரத்தன்மை சீர்குலைய வாய்ப்பு இருப்பதால் மிகவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சோமாலியாவில் மோசமான அரசியல் குறித்து ஆலோசனை நடத்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர அவசரமாக கூடியுள்ளது.

இந்த கூட்டத்தில் ஐ.நாவின் சிறப்பு தூதரான ஜேம்ஸ் ஸ்வான் என்பவர் கலந்து கொண்டு கூறியதாவது “சோமாலியா நாட்டில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலால் பதற்றங்கள் நீடிக்கிறது. இது மேலும் கவலையை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |